கடவூரில் பள்ளி மாணவர்களுக்கு இலவச வினா - விடை புத்தகம் வழங்கல்

கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி வழங்கினார்;

Update: 2026-01-10 14:39 GMT
கரூர் மாவட்டம்,கடவூர் பகுதிகளில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியருக்கு செந்தில் பாலாஜி அறக்கட்டளை சார்பில், பொதுத்தேர்வுக்கான வினா-விடை புத்தகங்களை கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி வழங்கினார் காணியாளம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி,பாலவிடுதி அரசு மேல்நிலைப்பள்ளி,தரகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி,கருணிகுளத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில் பயிலும் மாணவ,மாணவியருக்கு பொதுத்தேர்வை முன்னிட்டு வினா,விடை புத்தகங்கள் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலர்கள், கழக நிர்வாகிகள்,பள்ளி தலைமை ஆசிரியர்கள்,மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்

Similar News