வருவாய்த்துறை கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தல்

வருவாய்த்துறை கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தல்;

Update: 2026-01-10 16:04 GMT
தமிழக வருவாய்த்துறையில் கிராம ஊழியர்களாக பணியாற்றிவரும் 15 ஆயிரம் ஊழியர்களின் நீண்டநாள் கோரிக்கையான வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும் என தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்ட தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் தமிழக ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தனிடம் மனு அளித்தனர். இதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: தமிழக வருவாய் துறையில் கிராம உதவியாளர்களாக பணியாற்றி வரும் 15 ஆயிரம் ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி கோரிக்கை விடுத்துவருகிறோம். பல ஆண்டுகளாக இந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. கிராம உதவியாளர் பணி என்பது தமிழக அரசின் திட்டங்களை செயல்படுத்தும் பணிக்கு உதவியாக உள்ள முழு நேர பணியாகும். பேரிடர் காலங்களையும் இப்பணியாளர்கள் நேரங்காலம் பார்க்காமல் முழு நேரமாக தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர். எனவே கிராம உதவியாளர்களை நீண்ட நாள் கோரிக்கையான கால முறை ஊதியம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வழிவகை செய்ய வேண்டும் என ராசிபுரம் வட்ட வருவாய் கிராம ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் பி.வெங்கடாஜலம், செயலாளர் தனசேகரன் ,பொருளாளர் கே.குமார் ஆகியோர் அமைச்சர் மா.மதிவேந்தனிடம் நேரில் மனு அளித்தனர்.

Similar News