ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் பொதுமக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா அமைச்சர் எம் பி வழங்கினர்..
ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் பொதுமக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா அமைச்சர் எம் பி வழங்கினர்..;
ராசிபுரத்தில் 1 கோடியே 34 லட்சத்தில் 174 பேருக்கு பட்டாவை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார் நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் தலைமையில் ராசிபுரத்தில் பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் 97 பேருக்கு வீட்டமனை பட்டாவும், 47 பேருக்கு இ-பட்டாவும் என மொத்தம் 144 பேருக்கு 1 கோடியே 34 லட்சத்து 60 ஆயிரத்தில் பட்டாக்களை அமைச்சர் மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஸ்குமார் ஆகியோர் வழங்கினார்கள். மேலும் மின்சார இணைப்பை பெற 30 பேருக்கு தடையில்லா சான்றும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ராசிபுரம் நகர கழக செயலாளர் என். ஆர். சங்கர், ஒன்றிய கழக செயலாளர்கள் ஜெகநாதன், ராமசாமி, துரைசாமி, மற்றும் பேரூர் கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகள், என பலர் கலந்து கொண்டனர்..