திருநெல்வேலி மாநகராட்சி நெல்லை மண்டலம் 28வது வார்டு பாரதியார் தெருவில் அமைந்துள்ள தமிழறிஞர் கா.சு பிள்ளையின் நூலகம் ரூபாய் 10 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று (ஜனவரி 11) நடைபெற்றது. இதில் 28வது வார்டு அதிமுக கவுன்சிலர் சந்திரசேகர் கலந்து கொண்டு நூலகத்தை திறந்து வைத்தார்.