கடையநல்லூரில் ரத்ததான முகாம் நடந்தது
கடையநல்லூரில் ரத்ததான முகாம் நடந்தது;
கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மதினா நகர் கிளை மற்றும் தென்காசி அரசு மருத்துவமனை இரத்த வங்கி இணைந்து நடத்திய ரத்ததான முகாம் கடையநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் முகாமிற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதினா நகர் கிளை தலைவர் பாதுஷா தலைமை தாங்கினார். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென்காசி மாவட்ட மருத்துவ அணி பொறுப்பாளர் அப்துல்லாஹ், துணைச் செயலாளர்கள் தாவூத் மற்றும் அப்துல் பாசித் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாவட்டத் தலைவர் அப்துல் சலாம் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார் சிறப்பு அழைப்பாளராக கடையநல்லூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அனிதா பாலின் தென்காசி மாவட்ட ரத்த வங்கி மருத்துவர் பாபு தலைமையிலான மருத்துவகுழுவினர் கொடையாளர்களிடமிருந்து ரத்தங்களை தானமாக பெற்றுக் கொண்டனர்.இந்த இரத்ததான முகாமில் அனைத்து தரப்பு பொதுமக்களும் கலந்து கொண்டு கொண்டனர். முகாமில் கலந்து கொண்டு குருதிக்கொடையளித்த சகோதரர்களுக்கு அரசு சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. முகாமில் கடையநல்லூர் அனைத்து கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளையும்மதினாநகர் கிளை செயலாளர் ஜபருல்லாஹ், பொருளாளர் அபூபக்கர் ,துணைத் தலைவர் ஜலாலுதீன், துணைச் செயலாளர் அக்பர் அலி, கிளை மருத்துவ அணி பொறுப்பாளர் உமர் பாரூக், தொண்டரணி பொறுப்பாளர் ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர் செய்திருந்தினர்.