கரூர்- புதிய வழித்தடத்தில் பேருந்தை துவக்கி வைத்தார் செந்தில் பாலாஜி.

கரூர்- புதிய வழித்தடத்தில் பேருந்தை துவக்கி வைத்தார் செந்தில் பாலாஜி.;

Update: 2026-01-11 14:14 GMT
கரூர்- புதிய வழித்தடத்தில் பேருந்தை துவக்கி வைத்தார் செந்தில் பாலாஜி. கரூரில் அண்மையில் திருமாநிலையூரில் புதிதாக திறக்கப்பட்ட முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேருந்து நிலைய வளாகத்தில் கரூரிலிருந்து பெருந்துறை செல்லும் புதிய வழித்தடத்தில் பேருந்தை துவக்கும் விழா மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி புதிய வழித்தடத்தில் கொடியசைத்து பேருந்தை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கரூர் மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன், தமிழக அரசு ஈரோடு கோட்ட போக்குவரத்து மேலாளர் சுப்பிரமணியம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் போக்குவரத்து துறை அதிகாரிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

Similar News