சர்வதேச உரிமை கழக திருநெல்வேலி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்
சர்வதேச உரிமை கழகம்;
சர்வதேச உரிமை கழகத்தின் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் இன்று சேவியர் காலனியில் உள்ள கழக அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இதில் மாநில இணை பொதுச்செயலாளரும் திருநெல்வேலி மாவட்ட தலைவருமான விக்னேஷ், மாநில துணை பொதுச்செயலாளர் காந்திமதிநாதன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.இந்த கூட்டத்தில் வருகின்ற 23,24,25 ஆகிய தேதிகளில் ஏற்காட்டில் நடைபெறும் பயிற்சி பட்டறையில் திரளாக பங்கேற்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் நெல்லை மண்டல செயலாளர் டாக்டர் நெல்லை குமரன், நெல்லை மண்டல ஒருங்கிணைப்பாளர் மகாராஜன்,மத்திய மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், வடக்கு மாவட்ட செயலாளர் பாசித், மேற்கு மாவட்ட செயலாளர் பாலாஜி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.