திருச்செங்கோடு கிழக்கு மற்றும் மேற்கு நகர திமுக சார்பில் நகர அளவிலான திராவிட பொங்கல் விழா விளையாட்டுப் போட்டிகள் வாலிபால் மற்றும் கபடி போட்டிகள் நடைபெற்றது
திருச்செங்கோடு கிழக்கு மற்றும் மேற்கு நகர திமுக சார்பில் நகர அளவிலான திராவிட பொங்கல் விழா விளையாட்டுப் போட்டிகள் வாலிபால் மற்றும் கபடி போட்டிகள் நடைபெற்றது இதில் கபடி போட்டிகளில் பத்துக்கும் மேற்பட்ட அணிகளும் வாலிபால் போட்டியில் 15க்கும் மேற்பட்ட அணிகளும் பங்கேற்று விளையாடினார்கள்;
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கிழக்கு மற்றும் மேற்கு நகர திமுக சார்பில் நகர அளவிலான திராவிட பொங்கல் விழா விளையாட்டுப் போட்டிகள் நேற்றும் இன்றும்நடைபெற்றது. வாலிபால் மற்றும் கபடி போட்டிகள் நடைபெற்றது. இதில் கபடி போட்டிகளில் பத்துக்கும் மேற்பட்ட அணிகளும் வாலிபால் போட்டியில் 15க்கும் மேற்பட்ட அணிகளும் பங்கேற்று விளையாடினார்கள் இறுதி வாலிபால் போட்டியை திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் சேலம் கிழக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சேலம் ஏ வி எஸ் கல்லூரியின் முதல்வர் சீனிவாசன்திருச்செங்கோடு மேற்கு நகர திமுக பொறுப்பாளர் முன்னாள் நகர் மன்ற தலைவர் நடேசன் கிழக்கு நகர திமுக பொறுப்பாளர் துணைத் தலைவர் கார்த்திகேயன் நகர அவை தலைவர் மாதேஸ்வரன், ஆகியோர் துவக்கி வைத்தனர்.இந்தப் போட்டிகளில்நகர அளவிலான விளையாட்டு வீரர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.கபடி பிரிவில் முதலிடம் பிடித்த எஸ்.பி. என் A அணிக்கு 5 ஆயிரம் ரொக்கப் பரிசு கோப்பை, 2ம் இடம் பிடித்த எஸ்.பி. என் B அணிக்கு 4ஆயிரம் மற்றும் கோப்பை 3ம் இடம் பிடித்த அன்னைத் தமிழ் அணிக்கு 3 ஆயிரம் மற்றும் கோப்பை பரிசாக வழங்கப் பட்டது. இதே போல் வாலிபால் பிரிவில் முதல் பரிசு பெற்ற மாணிக் பிரண்ட்ஸ் அணிக்கு5000 ரொக்கப் பரிசு மற்றும் கோப்பை இரண்டாம் பரிசு பெற்ற சந்துரு பிரண்ட்ஸ் அணிக்கு 3000 ரொக்க பரிசு மற்றும் கோப்பை மூன்றாம் இடம் பிடித்த பி.ஆர்.சி அணிக்கு ரூ 3000 ரொக்க பரிசு மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. பரிசளிப்பு நிகழ்ச்சியில்திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் சேலம் கிழக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சேலம் ஏ வி எஸ் கல்லூரியின் முதல்வர் சீனிவாசன்திருச்செங்கோடு மேற்கு நகர திமுக பொறுப்பாளர் முன்னாள் நகர் மன்ற தலைவர் நடேசன் கிழக்கு நகர திமுக பொறுப்பாளர் துணைத் தலைவர் கார்த்திகேயன் நகர அவை தலைவர் மாதேஸ்வரன், முன்னாள் நகர துணை செயலாளர் எஸ்வி.ராஜேந்திரன், கோபி, நானா நானி கார்த்தி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். பரிசு பெற்ற விளையாட்டு வீரர்களை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் சீனிவாசன் பாராட்டி வாழ்த்தினார்.