பெருங்களுரில் திராவிட பொங்கல் முன் ஏற்பாடுகள்ஆய்வு

திராவிட பொங்கல் திருவிழாமுன் ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர் பார்வை;

Update: 2026-01-12 00:23 GMT
புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் புதுக்கோட்டை வடக்கு ஒன்றியம் பெருங்களூரில் கழக இளைஞரணி செயலாளர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திராவிட பொங்கல் திருவிழா மற்றும் கலை பண்பாட்டு திருவிழா நிகழ்ச்சி 13:1/2026 அன்று மாலை நடைபெறுவதையொட்டி முன்னெற்பாடு பணிகளை மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் KK.செல்லபாண்டியன் பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார். ஒன்றிய செயலாளர்கள் RR.சாமிநாதன், முக.ராமகிருஷ்ணன், மாவட்ட அவைத்தலைவர் அரு.வீரமணி, ஒன்றிய அவைத்தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் VGR.மணிவண்ணன், அரசு வழக்கறிஞர் பூங்குடி சிவா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெய்சங்கர், தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிஎழில் ராஜா, உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்

Similar News