கொடைக்கானல் மன்னவனூர் ஆடு, முயல் ஆராய்ச்சி நிலையத்தினை காண நுழைவு கட்டணம் உயர்வு*
Dindigul;
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிராமமான மன்னவனூரில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஆட்டுரோமம் ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இந்த ஆட்டு ரோமம் ஆராய்ச்சி நிலையத்தில் செம்மறியாடுகள், முயல் வகைகள் பராமரிக்கப்பட்டு சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் 15 வயது மேல் உள்ள நபர்களுக்கு ரூ.20 நுழைவு கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு நுழைவு கட்டணம் உயர்த்தப்பட்டு தற்போது 15 வயது, அதற்கு மேல் உள்ள அனைவருக்கும் நுழைவு கட்டணமாக ரூ.50-ம், 15 வயதுக்கு கீழ் உள்ள அனைத்து சிறுவர்களுக்கும் ரூ.20 எனவும் 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு கட்டணம் இல்லை என்று நடைமுறைப்படுத்தப்பட்டு இன்று முதல் சுற்றுலா பயணிகளிடம் வசூல் செய்து வருகின்றனர்