நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி ஸ்ரீராமகிருஷ்ணா நடுநிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரியும் நல்லாசிரியர் பொன்ரேகா 1330 குறளுக்கு க்யூஆர் கோடு உருவாக்கி அதில் திருவள்ளுவர் திருவுருவத்தை கொண்டு வந்துள்ளார். ஆசிரியரின் இந்த சாதனையை பெங்களூர் யூனிட்டி யூனிவர்ஸ் உலக சாதனை நிறுவனம் புதுவித உலக சாதனையாக அங்கீகரித்துள்ளது. ஆசிரியரின் இந்த செயலுக்கு பாராட்டு குவிந்து வருகின்றது.