கள்ளக்குறிச்சி: திமுக நிர்வாகிகளுக்கு புத்தாடை பரிசு தொகுப்பு வழங்கினார் எம்எல்ஏ வசந்தம். கார்த்திகேயன்....
கள்ளக்குறிச்சி மாவட்டம், தெற்கு மாவட்ட திமுக கழக சார்பில் மாவட்ட கழக செயலாளர் எம்எல்ஏ வசந்தம் கார்த்திக்கேயன் தலைமையில் கழக 2000,மேற்பட்டநிர்வாகிகளுக்கு புத்தாடை பரிசுத்தொகுப்பு வழங்கினார்;
கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி,கள்ளக்குறிச்சி நகர கழகத்திற்கு உட்பட்ட மாவட்ட,நகர, வார்டு கழக நிர்வாகிகள்,தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள், தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள், நகர மன்ற உறுப்பினர்கள்,மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள்,பாக முகவர்கள், டிஜிட்டல் பாக முகவர்கள்,கழக வாக்குச்சாவடி குழு உறுப்பினர்கள், என 2000 - கும் மேற்பட்ட கழகத் தோழர்களுக்கு, தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, புத்தாடைகள் மற்றும் பரிசுத்தொகுப்புகள் வழங்கி, தனது பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்தார் வசந்த கார்த்திக்கேயன் எம் எல் ஏ