கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் தகவல் தாெழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுக்கான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது
கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் பாரி தலைமை வகித்தார்;
கரூர் மாவட்டம்,கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் தகவல் தாெழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுக்கான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது கிருஷ்ணராபுரம் ஒன்றியம் மேட்டுமகாதாரனபுரம் முருகன் கோவிலில் அதிமுக தகவல் தாெழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டமானது சிறப்பான முறையில் நடந்தது இந்நிகழ்வில் கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் பாரி தலைமை வகித்தார் கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய பகுதி தகவல் தாெழில்நுட்ப பிரிவு செயலாளர் கார்த்திகேயன் ஏற்பாட்டில், மாநில தகவல் தாெழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜ் சத்தியன் மற்றும் ஈரோடு மண்டல தகவல் தாெழில்நுட்ப பிரிவு செயலாளர் கவின் ராஜ்,கரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி செயலாளர் சிவராஜ் ஆகியோரின் ஆலோசனையின்படி நடந்தது இக்கூட்டத்தில் ஈரோடு மன்டல துணைத் தலைவர் பசுபதி செந்தில் கலந்து கொண்டு சிறப்புரை அற்றினார் இதில் அவர் பேசியதாவது, தகவல் தொழில்நுட்ப பிரிவின் செயல்பாடுகள்,வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிறுத்தி ஆற்ற வேண்டிய களப்பணிகள்,கருத்து பரிமாற்றம்,திமுக ஆட்சியின் விமர்சனங்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது இதில் கரூர் மாவட்ட அஇஅதிமுக தகவல் தாெழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் கார்த்திக்,குளித்தலை நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கார்த்தி குளித்தலை நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி ராமகிருஷ்ணன்,தியானேஷ் உள்ளிட்ட ஒன்றிய,ஊராட்சி கிளைக் கழக நிர்வாகிகள் என பலரும் கலந்துகொண்டனர்.