ராயனூரில் பகுதி நேர நியாய விலை கடையை திறந்து வைத்தார் செந்தில் பாலாஜி.

ராயனூரில் பகுதி நேர நியாய விலை கடையை திறந்து வைத்தார் செந்தில் பாலாஜி.;

Update: 2026-01-12 11:50 GMT
ராயனூரில் பகுதி நேர நியாய விலை கடையை திறந்து வைத்தார் செந்தில் பாலாஜி. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூர் பகுதியில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற பகுதி நேர ரேஷன் கடை திறப்பு விழாவில் முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான செந்தில் பாலாஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பகுதி நேர ரேஷன் கடையை திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் சரவணன் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள்,ஊர் பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு திறப்பு விழாவை சிறப்பித்தனர்.

Similar News