நாமக்கல் கட்டுநர் சங்கம் சார்பில் இலவச பொது மருத்துவ முகாம்.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி எஸ். புதுப்பாளையம் பகுதியில் நாமக்கல் கட்டுநர் சங்கம் சார்பில் இலவச பொது மருத்துவ முகாம்.;

Update: 2026-01-12 12:53 GMT
பரமத்தி வேலூர்,ஜன.12: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா செருக்கை ஊராட்சி எஸ்.புதுப்பாளையம் பகுதியில் நாமக்கல் மைய அகில இந்திய கட்டுநர் சங்கம் ,திருச்செங்கோடு சுவாமி விவேகானந்தா மருத்துவ கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்திய சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு அகில இந்திய கற்றோர் சங்க நாமக்கல் மைய தலைவர் வி .எஸ் .தென்னரசு தலைமை வகித்தார்.சிறப்பு விருந்தினராக டாக்டர் பெரியசாமி கலந்துகொண்டு மருத்துவ முகாமை துவக்கி வைத்தார் .மருத்துவ முகாம் சுவாமி விவேகானந்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவர் டாக்டர் சுபா தலைமையிலான செவிலியர்கள், உதவியாளர்கள் கொண்ட குழுவினர் முகாமில் கலந்து கொண்ட முதியவர்கள், பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணி பெண்கள், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலருக்கும் பொது மருத்துவம், எலும்பு மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, மகளிர் நல மருத்துவம், கண் பரிசோதனை, பொது அறுவை சிகிச்சைக்கான மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது .அதேபோல் இதய நோய் உள்ளவர்கள் ,ரத்த கொதிப்பு, சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பு சத்து குறைபாடு உள்ளவர்கள் ,முழங்கால் மூட்டு வலி, தோள்பட்டை வலி ,எலும்பு முறிவு, மூட்டு தேய்மானம் மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை வேண்டுவோர், ஹெர்னியா, மூலம், பவுத்திரம் ,பித்தப்பை, சிறுநீரக கற்கள் உள்ளவர்கள், நாள்பட்ட ஆறாத புண் உள்ளவர்கள் ,தைராய்டு, கர்ப்பப்பை மார்பக கட்டிகள், மாதவிடாய் பிரச்சனை, குழந்தை பேரு வேண்டுபவர்கள், வயிறு மற்றும் குடலில் புண் கட்டி உள்ளவர்கள் கலந்து கொண்டனர். கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள் ,கண் புரை அறுவை சிகிச்சை வேண்டுவோர் கலந்து கொண்டனர் அதேபோல் முகாமில் தலைவலி, காய்ச்சல் ,கால் வலி, கை வலி ,உடல் வலி, இடுப்பு வலி , கண் வலி உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கும் பரிசோதனை செய்து உரியவர்களுக்கு உரிய மருந்து ,மாத்திரைகளை வழங்கி பொது மக்களுக்கு நோய் பரவுவதற்கான காரணம் குறித்தும், நோய் பரவாமல் தடுப்பதற்கான ஆலோசனைகளையும் வழங்கினார்கள். முகாமில் சருக்களை ஊராட்சி பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். முகாமில் டாக்டர் பெரியசாமி, நாமக்கல் மைய அனைத்து இந்திய கட்டுநர் சங்க பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Similar News