பரமத்தி வேலூரில் பா.ம.க.ராமதாஸ் அணி செயற்குழு கூட்டம்.

பரமத்தி வேலூரில் பா.ம.க.ராமதாஸ் அணி ஒருங்கிணைந்த நாமக்கல் மாவட்டம் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.;

Update: 2026-01-12 13:05 GMT
பரமத்தி வேலூர்,ஜன.12: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி ( ராமதாஸ்) ஒருங்கிணைந்த நாமக்கல் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நாமக்கல் மத்திய மாவட்ட செயலாளர் ராஜாராம் தலைமை வகித்தார். நாமக்கல் மத்திய தலைவர் மாவட்ட தலைவர் பிரதாப் வரவேற்றார் .கூட்டத்தில் வன்னியர் சங்க நாமக்கல் மத்திய மாவட்ட செயலாளர் விஸ்வநாதன், நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் மோகன்ராஜ், நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.சிறப்பு அழைப்பாளராக கரூர் மாவட்ட செயலாளரும் தெற்கு மற்றும் மேற்கு மண்டல பொறுப்பாளருமான பாஸ்கரன் கலந்து கொண்டு பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த பொறுப்பாளர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார் . பாமக தலைமை நிர்வாக குழு உறுப்பினர் சதாசிவம் கலந்து கொண்டு வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் கடுமையாக பாடுபட்டு பாமகவை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். செயற்குழு கூட்டத்தில் மாவட்ட ,ஒன்றிய ,பேரூர், கிளை பாமக பொறுப்பாளர்கள், பல்வேறு அணி பொறுப்பாளர்கள், மகளிர் அணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர் முடிவில் கபிலர்மலை மேற்கு ஒன்றிய செயலாளர் கவின்பாரதி நன்றி கூறினார்.

Similar News