சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த முகாமினை
பார்வையிட்ட மாவட்ட கலெக்டர் குமாரபாளையத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த முகாமினை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார்;
குமாரபாளையம் தாசில்தார் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், புதிதாக வாக்காளர்கள் பட்டியலில் சேர்த்தல், மற்றும் வீட்டுக்கு அருகாமையில் உள்ள ஓட்டுச்சாவடிக்கு ஓட்டினை மாற்றிக்கொள்ளவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமினை மாவட்ட கலெக்டர் துர்கா பார்வையிடவந்தார். அப்போது, ஓட்டுச்சாவடிக்கு சென்று ஓட்டு போட இயலாத மாற்றுத்திறனாளிகள் பலபேர் உள்ளனர் அவர்கள் வீட்டில் இருந்தே வாக்கு செலுத்தவதற்கான விண்ணப்பம் வழங்கும் முகாம் ஏற்படுத்துமாறு மாற்றுத்திறனாளிகள் சங்க கூட்டமைப்பு மாவட்ட தலைவர் பழனிவேல் கோரிக்கை விடுத்தார். இது குறித்து பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் துர்கா கூறினார்.