பா.ஜ.க. சார்பில் பொங்கல் விழா

குமாரபாளையத்தில் பா.ஜ.க. சார்பில் பொங்கல் விழா நடந்தது.;

Update: 2026-01-12 13:11 GMT
குமாரபாளையத்தில் பா.ஜ.க. சார்பில் பொங்கல் விழா நகர தலைவர் வாணி பிரபு தலைமையில் நடந்தது. பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தபட்டது. பொதுமக்களுக்கு பொங்கல், கரும்புகள் வழங்கப்பட்டன. சிறுவர், சிறுமியர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை, மாவட்ட பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சரவணராஜன் வழங்கி, வாழ்த்தினார். பெரியவர்களுக்கும் இசை நாற்காலி, வாயில் ஸ்பூன் கொண்டு எலுமிச்சைபழம் எடுத்தவாறு ஓடி வருதல், கயிறு இழுக்கும் போட்டி, கோலப்போட்டி ஆகியன நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. பொருளாதார பிஈவு மாவட்ட தலைவர் மணிகண்டன், மகளிரணி நகர தலைவர் தேவகி உள்பட பலர் பங்கேற்றனர்

Similar News