மணப்பாறை நீதிமன்ற வளாகத்தில் பொங்கல் விழா. பொங்கலிட்டு உற்சாகமாக கொண்டாடிய நீதிபதிகள், வழக்கறிஞர்கள்.

மணப்பாறை நீதிமன்ற வளாகத்தில் பொங்கல் விழா. பொங்கலிட்டு உற்சாகமாக கொண்டாடிய நீதிபதிகள், வழக்கறிஞர்கள்.;

Update: 2026-01-12 13:11 GMT
திருச்சி மாவட்டம், மணப்பாறை, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. வரும் 15ஆம் தேதி பொங்கல் விழா நாடெங்கும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. அந்த வகையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. சார்பு நீதிபதி ராஜசேகர், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ஜெயமுருகன், குற்றவியல் நீதிபதி அசோக்குமார், அரசு வழக்கறிஞர் முரளிகிருஷ்ணன், வழக்கறிஞர் சங்க தலைவர் செங்குட்டுவன், செயலாளர் மகேந்திரன், முன்னாள் தலைவர் மோகன்தாஸ் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் கரும்பு நட்டு வைக்க புதுப்பானையில் பொங்கலிட்டு வழிபாடு நடத்தி அனைவருக்கும்‌ பொங்கல் வழங்கினர். ஒருவருக்கொருவர் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

Similar News