கூடாரவல்லி சிறப்பு வழிபாடு
குமாரபாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் கூடாரவல்லி சிறப்பு வழிபாடு நடந்தது.;
குமாரபாளையம் தம்மண்ணன் வீதியில் உள்ள பெரிய மாரியம்மன் திருவிளக்கு வழிபாடு குழுவினர் சார்பில் கூடாரவல்லி சிறப்பு வழிபாடு நடந்தது. இதனையொட்டி கோவிலில் உள்ள அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. திருவிளக்கு வழிபாடு மற்றும் பக்தி பஜனை பாடல் நிகழ்ச்சிகள் நடந்தன., பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.