விடுதலைச் சிறுத்தைகள் கட்சி புதிய நிர்வாகிகள் அறிமுக விழா

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி குமாரபாளையம் தொகுதி புதிய நிர்வாகிகள் அறிமுக விழா கூட்டம் நடந்தது.;

Update: 2026-01-12 13:15 GMT
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி குமாரபாளையம் தொகுதி புதிய நிர்வாகிகள் அறிமுக விழா கூட்டம் மற்றும் கட்சியின் விளக்க உரை கூட்டம் மாவட்ட செயலர் கதிர்வேந்தன் தலைமையில் நடந்தது. குமாரபாளையம் நகர செயலர் பிரபு வரவேற்றார். புதிய நிர்வாகிகளுக்கு மாவட்ட பொருளர் கார்த்தி, மாவட்ட துணை செயலர் தீபா, மாவட்ட செய்தி தொடர்பாளர் அசோக்குமார், உள்ளிட்ட பலர் வாழ்த்துக்கள் கூறினர். கட்சியின் கொள்கைகள் குறித்து, ஈரோடு மண்டல செயலர் ஜாபர் அலி, மண்டல துணை செயலர் ஜெயக்குமார் ஆகியோர் பேசினர். ஒன்றிய பொறுப்பாளர் அண்ணாதுரை நன்றி கூறினார்.

Similar News