சேத்துப்பட்டு திவ்யா கல்வி நிறுவனங்கள் சார்பில் சமத்துவ பொங்கல் விழா.

சேத்துப்பட்டு திவ்யா கல்வி நிறுவனங்களின் சார்பாக திவ்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.;

Update: 2026-01-12 18:04 GMT
ஆரணி, சேத்துப்பட்டு திவ்யா கல்வி நிறுவனங்களின் சார்பாக திவ்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளியின் முதல்வர் ஆர்.முரளி வரவேற்புரை வழங்கினார். பின்னர் திவ்யா கல்வி நிறுவனங்களின் புல முதல்வர்(Academic Deen) எஸ்.செல்வி வாழ்த்துரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து திவ்யா கல்வி நிறுவனங்களின் தாளாளர் பா.செல்வராஜன் தமிழர் திருநாளாம், பொங்கல் திருநாளை பற்றி மாணவர்களிடையே கருத்துக்களை கூறி மாணவர்களுக்கு இனிப்பு பொங்கலை வழங்கினார். திவ்யா கல்வி நிலைய பொருளாளர் திலகவதி செல்வராஜன், கல்வி நிறுவன செயலாளர்.எஸ்.செந்தில்குமார், துணைத்தலைவர் எஸ்.பிரவீன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மக்கள் தொடர்பு அலுவலர் சக்திவேல் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் கலந்துகொண்டனர். அதனைத் தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. பின்னர் நிகழ்ச்சியின் இறுதியாக துணை முதல்வர் பி.சுரேஷ் நன்றி கூறினார்.

Similar News