ஆரணியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி.

ஆரணி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு மாத விழா முன்னிட்டு ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகன பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார் ஆரணி கோட்டாட்சியர் சீ.சிவா.;

Update: 2026-01-12 18:06 GMT
ஆரணி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு மாத விழா முன்னிட்டு ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இப்பேரணியில் ஆரணியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சிவகுமார் தலைமை தாங்கினார். ஆரணி கோட்டாட்சியர் சீ.சிவா கொடியசைத்து பேரணியினை துவக்கி வைத்தார். இதில் ஆரணி டிஎஸ்பி சுரேஷ்சண்முகம், எஸ்.ஐக்கள் மற்றும் போலீசார், சமூக ஆர்வலர்கள் வாகன ஓட்டிகள் பலர் கலந்து கொண்டனர். இப்பேரணி ஆரணி நகர காவல் நிலையத்தில் இருந்து துவங்கி பழைய பஸ்நிலையம், காந்திரோடு, அண்ணாசிலை வழியாக சென்று மீண்டும் காவல் நிலையத்தை சென்றடைந்தனர். மேலும ்இதில் மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜராஜேஸ்வரி, ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் பழனி, ராஜா, முனீர், சேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்

Similar News