மோட்டார் சைக்கிள் மீது மோதிய பேருந்து
நெல்லை மாவட்டம் பேட்டையில் விபத்து;
நெல்லை மாநகர பேட்டை ஐடிஐ பேருந்து நிறுத்தம் அருகில் இன்று காலை மோட்டார் சைக்கிள் மீது சிப்காட் தனியார் நிறுவன பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் நரிக்குறவர் காலனி சேர்ந்த இரண்டு சிறுவர்கள் காயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.