மாவட்டத்தில் கஞ்சாபுகையிலை கடத்தப்பட்டவர்கள் கைது

Nagai;

Update: 2026-01-13 13:30 GMT
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கஞ்சா மது கடத்தல் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் மாவட்டத்தில் 22 லட்சம் மதிப்புள்ள 220 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு ஏழு பேர் குறுகிய காலத்திற்குள் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கே எஸ் பாலகிருஷ்ணன் தெரிவித்தார் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக டாக்டர் கே எஸ் பாலகிருஷ்ணன் சில தினங்களுக்கு முன்பு பொறுப்பேற்றுக்கொண்டார் இந்த நிலையில் மாவட்டத்தில் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட எஸ் பி கே எஸ் பாலகிருஷ்ணன் சக காவலர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்களுடன் பொங்கல் விழாவினை கொண்டாடினார் அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும்போது மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும் குற்றச் செயல்களை தடுக்கவும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் வேட்டைக்காரனிருப்பு பகுதியில் நடைபெற்ற வாகன சோதனையில் ஒரு நான்கு சக்கர வாகனம் மற்றும் 22 லட்சம் மதிப்புள்ள 220 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு ஏழு பேர் குறுகிய காலத்திற்குள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என தெரிவித்த எஸ் பி பாலகிருஷ்ணன் பொதுமக்கள் தங்களது குறைகளை நேரடியாகவும் whatsapp மூலமாகவும் தெரிவிக்கலாம் என கூறினார்

Similar News