மத்திய அரசின் திட்டங்களை தமிழக மக்களுக்கு புரியும் வகையில் மொழியாக்கம் செய்து மக்களிடம் கொண்டு சேர்க்க திமுக அரசு தவறிவிட்டது!பாஜக மாநில துணை தலைவர் இராமலிங்கம் குற்றச்சாட்டு
2047 உலக நாடுகளுக்கு இணையாக இந்தியாவை வல்லரசாக உருவாக்குகின்ற லட்சியத்தின் அடிப்படையில் பிரதமர் மோடியோடு அவரது எண்ணத்தை ஈடேற்றுவதற்கு தமிழகமும் ஒரு மாநிலமாக இருந்திட வேண்டும் என்ற நோக்கத்தோடு எண்ணங்களையும் சிந்தனைகளையும் லட்சியங்களையும் செயல்படுத்துகிற ஆட்சியாக தமிழகத்தில் உருவாக்க வேண்டும்;
இந்தியாவின் வளர்ச்சியோடு சேர்ந்து தமிழகமும் வளர்ச்சி பெறுவதற்காக பாரத பிரதமர் நரேந்திர மோடி எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என்றும் மத்திய அரசின் திட்டங்களை தமிழக மக்களுக்கு நன்கு புரியும் வகையில் மொழியாக்கம் செய்து மக்களிடம் கொண்டு சேர்க்க திமுக அரசு தவறிவிட்டது என்றும் பாஜக மாநில துணைத் தலைவர் டாக்டர் கே.பி. இராமலிங்கம் தெரிவித்துள்ளார்.பாரத பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற 23-ம் தேதி தமிழகம் வர உள்ளதை முன்னிட்டு நாமக்கல், கரூர், சேலம் மாவட்டங்களின் பாஜக தலைவர்கள், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், பாஜக மாநில துணைத்தலைவர் டாக்டர். கே.பி. இராமலிங்கம் தலைமையில் நாமக்கல் மாவட்ட பாஜக அலுவலகத்தில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் தமிழக வரவுள்ள பாரத பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் மாவட்டங்களின் சார்பில் பெருந்திரளாக கலந்துகொள்வது மற்றும் அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனைகளை கட்சி நிர்வாகிகளுக்கு டாக்டர். கே.பி. இராமலிங்கம் வழங்கினார்.இதன்பின்னர், மாவட்ட கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில துணைத்தலைவர் டாக்டர் கே.பி இராமலிங்கம்வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளில் மிக வேகமாக ஈடுபட்டு வருகிறோம். தமிழகத்தை சீர்கேடு ஆக்கியுள்ள திமுக ஆட்சியை அகற்றுவது அகற்றினால் தான் தமிழகம் இந்தியாவின் வளர்ச்சியோடு சேர்ந்து நல் வளர்ச்சி பெறும். 2047 உலக நாடுகளுக்கு இணையாக இந்தியாவை வல்லரசாக உருவாக்குகின்ற லட்சியத்தின் அடிப்படையில் பிரதமர் நரேந்திர மோடியோடு அவரது எண்ணத்தை ஈடேற்றுவதற்கு தமிழகமும் ஒரு மாநிலமாக இருந்திட வேண்டும் என்ற நோக்கத்தோடு அவரது எண்ணங்களையும் சிந்தனைகளையும் லட்சியங்களையும் செயல்படுத்துகிற ஆட்சியாக தமிழகத்தில் உருவாக்க வேண்டும் அதற்கு இப்போது உள்ள திமுக ஆட்சி அகற்றிட வேண்டும் என்பதற்காக பாஜக மிகுந்த முனைப்போடு பணியாற்றி வருகிறது. அதில் முதல் கட்டமாக தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் சிறப்பு மாநாடு வருகின்ற ஜனவரி 23-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. அந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்கான திட்டமிடுவதற்காக நாமக்கல், சேலம்,கரூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பாஜக மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் ஆலோசனை செய்துள்ளோம். கட்சியின் மாவட்ட தலைவர் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டில் திரளாக கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளோம்.நாமக்கல் மாவட்டம் போதமலைக்கு சாலை அமைக்க, மத்திய அரசின் முழு நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ள மலைவாழ் மக்கள் மேம்பாட்டு திட்டம். மலைவாழ் மக்கள் வாழ்கின்ற பகுதி மக்களுக்காக மத்திய அரசு ஒதுக்கி உள்ள நிதி, எடப்பாடி முதல்வராக இருந்தபோது அதற்கான திட்ட மதிப்பீடு அது அனுமதிகள் பெறப்பட்டன. சாலை அமைக்க, மாநில அரசின் வனத்துறை அனுமதி தராத நிலையில் மத்திய அரசு அதற்கான அனுமதி வழங்கி, 2019 ஏப்ரல் மாதம் 8-ம் தேதி அதற்கான அனுமதி வழங்கப்பட்டது. நிதியும் ஒதுக்கப்பட்டது. எடப்பாடி முதல்வராக இருந்தபோது அதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. இந்த திட்டம் உள்பட மத்திய அரசின் குடிநீர் திட்டம் வீட்டு வசதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களையும் மாநில அரசு திட்டங்களைப்போல கூறி வருகிறார்கள். மத்திய அரசு நிதி வழங்கினாலும் திட்டப் பணிகளை நிறைவேற்றுகின்ற பணி மாநில அரசினுடையது. இது போன்ற திட்டங்களை மாநில அரசு திட்டம் என திமுக எம்பி இராஜேஸ்குமார் கூறி வருவது தவறில்லை. மத்திய மாநில அரசுகள் இணைந்து தான் திட்டங்களை செயல்படுத்துகின்றன.தவெக தலைவர் விஜய் குறித்தான ஊடக செய்திகள் வெளியிடுவதில் தெளிவான கண்ணோட்டம் அமைய வேண்டும். ஜனநாயகன், பராசக்தி போன்ற திரைப் படங்களின் தணிக்கைக்கும் மத்திய அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை.* தமிழ்நாட்டை பொறுத்தவரை தேசிய ஜனநாயக கூட்டணி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் தேர்தலை சந்திக்கும் என ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டோம்.கூட்டணி மற்றும் தொகுதி ஒதுக்கீடு குறித்து அவர் முடிவெடுப்பார்.பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை மீதான தாக்கரேக்கள் விமர்சனம் குறித்து கேள்விக்கு பதில் அளித்த கே பி இராமலிங்கம், அண்ணாமலையின் கருத்து சரியானதே ஆகும். மும்பை அனைவருக்குமான சர்வதேச நகரமாகும். அந்த மாநகரம் அனைவருக்கும் வளர்ச்சி தருகின்ற மாநிலம் என்பதால் அவ்வாறு கூறியுள்ளார். 3-வது மொழி இந்திய மொழிகளில் ஏதாவது ஒரு மொழியை படிக்கலாம் என்றுதான் அரசு கூறுகிறது. தன்னை முன்னிலைப்படுத்தி கொள்வதற்காக திராவிட பொங்கல் என்று கூறுவதைப் போல மகாராஷ்டிராவினர் தங்களை முன்னுரித்துக் கொள்வதற்காக தாக்கரேக்கள் அவ்வாறு கூறுகிறார்கள். அண்ணாமலை கூறிய கருத்து தவறில்லை என மகாராஷ்டிரா மாநில முதல்வரை கூறியுள்ளார்.மத்திய அரசின் திட்டங்கள் மூலம் தமிழகத்தில் ஆண்டுக்கு 6 ஆயிரம் விவசாய கௌரவ நிதி, 75 லட்சம் பேர் பயன் பெறுகிறார்கள். மத்திய அரசின் திட்டங்களை ஹிந்தியில் பெயர்கள் உள்ளதால் அதனை, தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம், தமிழாக்கம் செய்து மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு மாநில அரசுக்கு உள்ளது. தமிழ் வளர்ச்சித் துறையை தங்கள் விளம்பரத்திற்காக திமுக அரசு பயன்படுத்திக் கொள்கிறது. மக்களுக்கு மத்திய அரசின் திட்டங்கள் தெரியக்கூடாது என்பதற்காக மாநில அரசு ஹிந்தி பெயரை மாற்றாமல் அப்படியே பயன்படுத்துகிறார்கள். அந்தந்த மாநில அரசுகள் அவர்கள் மொழியில் அதனை மொழியாக்கம் செய்து மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். அருந்ததியர், தேவாங்க செட்டியார் மக்கள் தங்கள் தாய் மொழியை எழுத படிக்க தெரிய வேண்டும். அதற்காகத்தான் தாய் மொழியை வளப்படுத்துவதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி, தங்கள் தாய்மொழியைப் படிக்க வலியுறுத்துகிறார். இணைப்பு மொழியாக ஆங்கிலத்தைப் போல இன்னொரு இந்திய மொழியை படிக்க வேண்டும் என்று பிரதமர் கூறுகிறார் என்றும் பாஜக மாநில துணைத்தலைவர் டாக்டர் கே. இராமலிங்கம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.இந்த செய்தியாளர் சந்திப்பின்போது, பாஜக நாமக்கல் மாவட்ட தலைவர்கள், சரவணன், ராஜேஷ்குமார்,கட்சி நிர்வாகிகள்உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.