அல்லாள இளைய நாயகர் பிறந்த நாள் விழா ஆலோசனை கூட்டம்

ஜேடர்பாளையத்தில் அல்லாள இளைய நாயகர் பிறந்த நாள் விழா அரசு விழாவாக கொண்டாடுவது சம்பந்தமாக திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. அலுவகலத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.;

Update: 2026-01-13 13:50 GMT
ஜேடர்பாளையத்தில் அல்லாள இளைய நாயகர் பிறந்த நாள் விழா அரசு விழாவாக கொண்டாடுவது சம்பந்தமாக திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. அலுவகலத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. தை முதல் நாள், ஜன 15ல் பரமத்தி வேலூர் வட்டம், ஜேடர்பாளையத்தில் அல்லாள இளைய நாயகர் பிறந்த நாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்பட உள்ளது. இங்கு நேரில் சென்று அவரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த, குறிப்பிட்ட ஒவ்வொரு அமைப்பினருக்கும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் படி நடந்து கொள்ள அறிவுறுத்தும் வகையில், ஆலோசனை கூட்டம் திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. அலுவலகக்தில், ஆர்.டி.ஓ. லெனின் தலைமையில் நடந்தது. அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட நிபந்தனைகளை கடை பிடிக்க வேண்டும், பேரணிக்கு அனுமதி இல்லை, என்பது உள்ளிட்ட பல விதிமுறைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டது. இதில் பல்வேறு ஊர்களை சேர்ந்த அல்லாள இளைய நாயகர் அபிமானிகள் பங்கேற்றனர்.

Similar News