திண்டுக்கல் அருகே கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த பிடியானை குற்றவாளி கைது
Dindigul;
திண்டுக்கல் அருகே கடந்த 2019-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் NGO-காலனியை சேர்ந்த ஸ்டீபன்ராஜ் மகன் பிரான்சிஸ் சேவியர் என்பவரை தாலுகா காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனை தொடர்ந்து பிரான்சிஸ்சேவியர் நீதிமன்ற பிணை பெற்று வெளியே சென்று நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால் திண்டுக்கல் நீதிமன்றம் பிடியானை பிறப்பித்தது. இதுதொடர்பாக தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன், சார்பு ஆய்வாளர் கிருஷ்ணவேணி காவலர்கள் சரவணன், ஈஸ்வரன் ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டு பிரான்சிஸ்சேவியரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி நீதிமன்ற பிடியானையை நிறைவேற்றினர்