தேசிய சாலை பாதுகாப்பு மாதவிழா விழிப்புணர்வு நிகழ்வு..

தேசிய சாலை பாதுகாப்பு மாதவிழா விழிப்புணர்வு நிகழ்வு..;

Update: 2026-01-13 15:24 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவினை தொடர்ந்து செவ்வாய்க்கிழமை எஸ்ஆர்வி பள்ளி வளாகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. நாமக்கல் வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பதுவைநாதன் உத்தரவின் பேரில், நடைபெற்ற நிகழ்ச்சியில் ராசிபுரம் மோட்டார் போக்குவரத்து ஆய்வாளர் ஏ.செல்வகுமார் தலைமை வகித்தார். தீயணைப்பு மீட்பு பணித்துறை, சிறப்பு நிலைய அலுவலர் ஆ.கோவிந்தசாமி, தீயணைப்பாளர்கள் பரமேஸ்வரன், கதிரவன், மனோஜ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களால் ஏற்படும் சேதத்தை தடுக்கும் முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு குறித்து புதிய ஓட்டுநர் உரிமம், ஓட்டுனர் உரிம புதுப்பித்தல், கனரக சரக்கு வாகன ஓட்டுநர் உரிமம் பெற வந்தோர், தகுதி சான்று புதுப்பித்தல் போன்ற பணிகளுக்கு வந்தவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் பள்ளி, கல்லூரி வாகன ஒட்டுனர்களுக்கும் தீத்தடுப்பு முறைகள், பாதுகாப்பான சாலை போக்குவரத்து குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டு, உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது.

Similar News