தரகம்பட்டி அரசு கலை கல்லூரியில் திராவிட பொங்கல் விழா கொண்டாட்டம்

கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாம சுந்தரி கலந்து கொண்டார்;

Update: 2026-01-13 16:45 GMT
கரூர் மாவட்டம்,கடவூர் மேற்கு ஒன்றியம் தரகம்பட்டி அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகளுடன் திராவிட பொங்கல் விழா கொண்டாடப்பட்டது இதில் கிருஷ்ணாயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ மாணவிகளுடன் சேர்ந்து பொங்கல் வைத்து கொண்டாடினார் இதில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பொங்கல் விழாவினை சிறப்பாக மகிழ்ச்சியுடன் கொண்டாடினர் இதில் கடவூர் மேற்கு ஒன்றிய துணை செயலாளர் பிரபாகரன்,தலைமை செயற்குழு உறுப்பினர் துரைராஜ், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் அழகர்,தரகம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் வேதவள்ளி, இளைஞர் அணி அமைப்பாளர் இளவரசன், IT விங் அமைப்பாளர் அபு, கஸ்தூரி, தங்கராஜ், கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், ஆசிரியர்கள்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்

Similar News