குளித்தலை நகர பகுதியில் பொதுமக்கள் அச்சமின்றி பொங்கல் திருநாள் கொண்டாட மாவட்ட எஸ்பி விழிப்புணர்வு

2 கிலோ மீட்டர் நடந்து சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஆலோசனை;

Update: 2026-01-13 17:53 GMT
தமிழகம் முழுவதும் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா நாளை முதல் கொண்டாடப்பட உள்ளனர். இந்த நிலையில் பொதுமக்கள் அச்சமின்றி பொங்கல் திருநாளை கொண்டாடவும் குற்ற சம்பவங்களை தடுப்பதற்காகவும் கரூர் மாவட்ட எஸ்பி ஜோஸ்.தங்கையா தலைமையில் குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார் முன்னிலையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் குளித்தலை நகரப் பகுதியில் நடந்து சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். குளித்தலை பெரியபாலம் பகுதியில் இருந்து சண்முக நகர், மீன்கார தெரு, மலையப்ப நகர் வழியாக மாரியம்மன் கோவில் வரை 2 கிலோமீட்டர் நடந்தே சென்ற மாவட்ட எஸ்பி அவ்வழியே உள்ள நகைக்கடை உரிமையாளரிடம் கண்காணிப்பு கேமிரா நடைமுறையில் இருப்பதை உறுதி செய்தும், அடமான வைக்க நகைகளை கொண்டு வருபவர்களில் சந்தேகத்திற்கு இடமான நபர்கள் குறித்து தகவல் தெரிவிக்க அறிவுறுத்தினார். மேலும் அவ்வழியே சலவை கடை உரிமையாளரிடம் இப்பகுதியில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடந்தால் உடனடியாக குளித்தலை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் இப்பகுதியில் பொதுமக்கள் அச்சமின்றி பொங்கல் திருநாளை கொண்டாட வேண்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எஸ்பி உடன் குளித்தலை சட்டம் ஒழுங்கு போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் அணிவகுத்து பின் தொடர்ந்து நடந்து சென்றனர். தினந்தோறும் குளித்தலை நகரம் மற்றும் கிராம பகுதிகளில் இதுபோன்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என குளித்தலை டிஎஸ்பி இடம் தெரிவித்து சென்றார்.

Similar News