தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.இந்த பொங்கல் திருநாளை முன்னிட்டு கங்கைகொண்டான் அருகே உள்ள அணைத்தலையூர் கிராமத்தில் இன்று காலை மினி மராத்தான் போட்டி நடைபெற்றது. இதனை மாநகராட்சி துணை மேயர் ராஜு கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் காவல்துறையினர், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.