வடுகச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்

நாகை வடுகச்சேரி;

Update: 2026-01-14 06:35 GMT
நாகப்பட்டினம் மாவட்டம் வட்டாரத்துக்குட்பட்ட அனைத்து ஆரம்ப சுகாதார நிலையிலிருந்தும் மற்றும் நகர்ப்புற சுகாதார நிலையிலிருந்தும் (வடுகச்சேரி வடவூர் தேமங்கலம் மருந்து கொத்தளம் நாகூர்) வடுகச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வட்டார மருத்துவ அலுவலர் மரு . பிருத்திவி ராஜன் தலைமையில் நடைபெற்றது இதற்கு உறுதுணையாகஇருந்த மருத்துவ அலுவலர்கள், மருந்தாளர்கள், பகுதி சுகாதார செவிலியர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர், சுகாதார ஆய்வாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், ஆய்வக நுட்பனர்கள், செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள், ஓட்டுநர்கள், அலுவலகப் பணியாளர்கள், மற்றும் டெங்கு கொசு புழு ஒழிப்பு களப்பனியாளர்கள் மற்றும் அனைத்து பணியாளர்களும் முழு ஒத்துழைப்பு நல்கி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் லெமன் ஸ்பூன், கோலப்போட்டிகள், பாட்டில் தண்ணீர் நிரப்புதல், இசை நாற்காலி , ஊறி பானை அடித்தல் ஆகிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது வெற்றி பெற்றவர்களுக்கு வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் மருத்துவர்கள் பரிசுப் பொருட்கள் வழங்கினர் அனைத்து பணியாளர்களுக்கும் பொங்கல் பரிசுகள் வழங்கப்பட்டது . இந்நிகழ்வை வடுகச்சேரி வட்டாரத்தில் உள்ள அனைத்து பணியாளர்களும் ஏற்பாடு செய்து பொங்கலை கொண்டாடி மகிழ்ந்தனர். நாகை மாவட்ட செய்தியாளர் ஜீ.சக்கரவர்த்தி

Similar News