கடவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது

இந்த விழாவிற்கு கடவூர் ஒன்றிய ஆனையர் மங்கையர்கரசி தலைமை வகித்தார்;

Update: 2026-01-14 07:04 GMT
கரூர் மாவட்டம் தமிழ்நாடு அரசின் வழி காட்டுதலின் படி தரகம்பட்டியில் உள்ள கடவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் தமிழர்களின் பாரம்பரிய மிக்க சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சி நடந்தது. இந்த விழாவிற்கு கடவூர் ஒன்றிய ஆனையர் மங்கையர்கரசி தலைமை வகித்தார். முன்னதாக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக வண்ண வண்ண கலர்களால் கோலமிட்டு, பலமை வாய்ந்த மன்பானையில் பொங்கல் வைத்தனர். பின்னர்.செங்கரும்பு, மஞ்சல் கொத்து உள்பட பல்வேறு பொருட்களை வைத்து அலங்காரம் செய்தனர். அதனை தொடர்ந்து கடவூர் ஊராட்சி ஒன்;றியத்தின் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவர்கள், ஒன்றிய பொறியாளர்கள், ஒன்றியப்பணி மேற்பார்வையாளர்கள், இளநிலை உதவிளார்கள், அலுவலக உதவியார்கள் ஆகியோர் முன்னிலையில் பொங்கல் படைத்து அனைவரும் தரிசனம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் முன்னால் ஒன்றிய கவுன்சிலர் கோமதி பிரபாகரன், மாவட்ட விளையாட்டு அணி துணை அமைப்பாளர் வடிவேல், உள்பட ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Similar News