மணப்பாறை அருகே சிப்காட் திட்ட அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா விளையாட்டு போட்டிகளில் அசத்திய சிறுவர்கள்.

மணப்பாறை அருகே சிப்காட் திட்ட அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா விளையாட்டு போட்டிகளில் அசத்திய சிறுவர்கள்.;

Update: 2026-01-14 19:54 GMT
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள சிப்காட் திட்ட அலுவலகத்தில் "இது நம்ம ஊரு சமத்துவ பொங்கல்" என்ற பெயரில் பொங்கல் விழா நடைபெற்றது. சிப்காட் திட்ட அலுவலர் மாரிமுத்து தலைமையில் நடைபெற்ற விழாவில் இந்து, இஸ்லாமியர், கிறிஸ்துவர் என அனைத்து சமுதாய மக்களுக்கும் கலந்து கொண்டு பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். விழாவில் ஜல்லிக்கட்டு காளைக்கு மரியாதை செய்யப்பட்டு அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. பின்னர் மியூசிக் சேர், சிலம்பம், பானை உடைத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதில் சிறுவர்கள் சிலம்பம் சுற்றி அசத்தினர். இதே போல் நடைபெற்ற போட்டிகளில் சிறுவர் - சிறுமியர் கலந்து கொண்டு வெற்றி வாகை சூடினர். பொங்கலை முன்னிட்டு அனைவரும் உற்சாகத்தின் மகிழ்ந்தனர். நிகழ்வில் சிப்காட் பெண் பணியாளர்களுக்கு மணப்பாறை கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் ஆரோக்கியசாமி பொங்கல் பரிசாக சேலை வழங்கினார். இந்நிகழ்வில் பல்வேறு துறை அதிகாரிகள், சிப்காட் பணியாளர்கள் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Similar News