வடவல்லநாடு ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா : ஆட்சியர் க.இளம்பகவத் பங்கேற்பு

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடவல்லநாடு ஊராட்சியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் கலந்து கொண்டு சிறப்பித்தார்.;

Update: 2026-01-15 03:02 GMT
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடிட அரசு அறிவித்திருந்ததைத் தொடர்ந்து, நேற்று (14.01.2026) ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடவல்லநாடு ஊராட்சியில் அனைத்து சமுதாய பொதுமக்கள் மற்றும் அனைத்து அரசு உயர் அலுவலர்கள் கொண்டாடிய சமத்துவ பொங்கல் விழாவில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், கலந்து கொண்டு சிறப்பித்தார். இவ்விழாவில் மயிலாட்டம், சிலம்பாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், பொய்க்கால் குதிரை உள்ளிட்ட பராம்பரிய கலை நிகழ்ச்சிகள் மற்றும் நாதஸ்வரம், தவில் போன்ற இசைக் கருவிகள் மூலம் இசை கலைஞர்கள் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், அவர்களை வரவேற்று அழைத்துச் சென்று, பராம்பரிய முறையில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவினை கொண்டாடினார். தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளானது, இயற்கைக்கும் உழைப்பிற்கும் நன்றி கூறும் திருநாளாகவும், சமூக வேறுபாடுகளை மறந்து, "பழையன கழிதலும், புதியன புகுதலும்” என்ற உயரிய தமிழர் சிந்தனையை நடைமுறையில் வெளிப்படுத்தும் நாளாகவும் விளங்குகிறது. மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகின்ற சமத்துவ பொங்கல் திருவிழாவில், பொங்கல் திருநாளை முன்னிட்டு இந்த மகிழ்ச்சி, உங்கள் உள்ளங்களிலும், உங்களுடைய இல்லங்களிலும், பொங்கட்டும்! என்று இந்த இனிய நேரத்தில் உங்கள் அனைவருக்கும் என்னுடைய பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளார். இந்த சமத்துவ பொங்கல் விழாவில் அனைத்து அரசு உயர் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

Similar News