திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் பொன்னேரி சட்டமன்றத் தொகுதியில் சமத்துவ பொங்கல் விழா மற்றும் பெண்களுக்கு மாபெரும் கோலப்போட்டி

திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா மற்றும் பெண்களுக்கு மாபெரும் கோலப்போட்டி நடைபெற்றது;

Update: 2026-01-15 03:10 GMT
திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் பொன்னேரி சட்டமன்றத் தொகுதியில் சமத்துவ பொங்கல் விழா மற்றும் பெண்களுக்கு மாபெரும் கோலப்போட்டி இன்று (14-01-2026) ஆண்டார்குப்பத்தில் அமைந்துள்ள ARETE HOMES-ல் நடைபெற்றது. இதில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது. இக்கோலப் போட்டியில் பொன்னேரி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற பெண்களுக்கு முதல் பரிசாக 20,000 ரூபாயும், இரண்டாம் பரிசாக 10 பேருக்கு 10,000 ரூபாயும் மற்றும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசாக 2500 ரூபாயும் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் வழங்கினார் அதனைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுக்கு வேட்டி சட்டை வழங்கி பொங்கல் விழாவை சிறப்பித்தார் இந்நிகழ்வில் கிழக்கு வட்டாரத் தலைவர் புருஷோத்தமன், மாவட்ட துணை தலைவர் வல்லூர் நந்தகுமார், கும்மிடிப்பூண்டி தொகுதி பொறுப்பாளர் வினோத், வட்டாரத் தலைவர் ஜெயசீலன் ,ஜெயசங்கர்,மகளிர் அணி சித்ரா, உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Similar News