தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் தலைவர் பீர் மஸ்தான் வெளியிட்டுள்ள வாழ்த்து அறிக்கையில் தமிழகத்தின் தனி விழா, பண்பாட்டு பெருவிழா,தமிழர்கள் மனிதர்களை மட்டுமில்லாமல் விலங்குகளையும் நேசிக்கும் அறத்தோடு வாழ்பவர்கள் என்பதை உலகிற்கு உணர்த்தும் திருநாள் என தெரிவித்துள்ளார்.