வேலூர் பேரூர் திமுக சார்பில் பொங்கல் விழா.

பரமத்தி வேலூரில் திமுக சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது.;

Update: 2026-01-15 13:37 GMT
பரமத்தி வேலூர், ஜன.15: நாமக்கல் மாவட்டம் வேலூர் பேரூர் திமுக சார்பில் கட்சி அலுவலகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே. எஸ். மூர்த்தி தலைமை வகித்தார். வேலூர் பேரூர் கழக செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார். நாமக்கல் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் மகிழ் பிரபாகரன் அனைவரையும் வரவேற்றார். விழாவில் கட்சி அலுவலகம் முகப்பில் நிர்வாகிகள் ஒன்று சேர்ந்து பொங்கல் பானையில் பொங்கல் வைத்து கொண்டாடினர். ஒருவருக்கு ஒருவர் பொங்கல் வாழ்த்துகள் சொல்லி மகிழ்ந்தனர். மேலும் இவ்விழாவில், நாமக்கல் மேற்கு மாவட்ட இளைஞர் அணி துணை பொறுப்பாளர் பூக்கடை சுந்தர், கபிலர்மலை வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் தளபதி சுப்பிரமணி,பேரூர் திமுக அவைத்தலைவர் மதியழகன், வழக்கறிஞர் பாலகிருஷ்ணன், ஜெகதீஸ் உட்பட கிளை, பேரூர்,, நகர கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News