ஜேடர்பாளையத்தில் திமுக சார்பில் பொங்கல் விழா.

ஜேடர்பாளையத்தில் கபிலர்மலை மத்திய ஒன்றிய திமுக சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.;

Update: 2026-01-15 13:58 GMT
பரமத்தி வேலூர், ஜன.15:  நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தொகுதிக்குட்பட்ட  கபிலர்மலை மத்திய ஒன்றிய திமுக சார்பில் ஜேடர்பாளையத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு கபிலர்மலை மத்திய ஒன்றிய திமுக பொறுப்பாளர் வழக்கறிஞர் சரவணகுமார் தலைமை வகித்தார். கபிலர்மலை ஒன்றிய பொருளாளர் கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தார். விழாவில் கட்சிஒன்றிய கழக நிர்வாகிகள் ஒன்று சேர்ந்து பொங்கல் பானையில் பொங்கல் வைத்து கொண்டாடினர். ஒருவருக்கு ஒருவர் பொங்கல் வாழ்த்துகள் சொல்லி மகிழ்ந்தனர். மேலும் இந்நிகழ்ச்சியில் நாமக்கல் மேற்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ஜோதி மற்றும் ஒன்றியம்,கிளை,நகரம் கழக பொறுப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News