பொங்கல் பண்டிகை மற்றும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ராசிபுரம் அருகே குதிரை வண்டி பந்தயம் நடந்தது
பொங்கல் பண்டிகை மற்றும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ராசிபுரம் அருகே குதிரை வண்டி பந்தயம் நடந்தது;
தமிழ்நாடு துணை-முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் மற்றும் பொங்கலை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே நாமகிரிப்பேட்டையில் குதிரை வண்டி பந்தயம் நடந்தது. போட்டியை முன்னாள் எம்.எல்.ஏ.,ராமசாமி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். சிறிய ரக குதிரை, பெரிய ரக குதிரை என மொத்தம் 5 பிரிவுகளாக பந்தயம் நடத்தப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் குதிரை வண்டிகள் பங்கேற்றன. அனைத்து பிரிவுகளிலும் வெற்றி பெற்ற குதிரை வண்டிகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கப் பரிசுகளும், பதக்கங்களும் வழங்கப்பட்டன.