உயர்கல்வி படிக்கும் மாணவ மாணவிகளுக்கு கலைஞர் கல்வி உதவி தொகை எம்பி ராஜேஷ்குமார் வழங்கினார்..

உயர்கல்வி படிக்கும் மாணவ மாணவிகளுக்கு கலைஞர் கல்வி உதவி தொகை எம்பி ராஜேஷ்குமார் வழங்கினார்..;

Update: 2026-01-15 17:03 GMT
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் தளபதி திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசியுடன் மாண்புமிகு. தமிழ்நாடு துணை முதலமைச்சர் இளம்தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலில் ராசிபுரம் ஒன்றியம் பிள்ளா நல்லூர் பேரூர், பட்டணம் பேரூர் ,அத்தனூர், வெண்ணந்தூர் ஆகிய பேரூரில் வார்டு கழகத்தில் தற்போது பொறுப்பில் உள்ள அவைத் தலைவர்/துணை செயலாளர், பொருளாளர் மற்றும் பேரூர் அணியின் அமைப்பாளர் / துணை அமைப்பாளர் மற்றும் தொடர்ந்து கழகத்தில் இரண்டு உறுப்பினர் அட்டைக்கு குறையாமல் உள்ளவர்களின் குடும்பத்தில் உயர்கல்வி படிக்கும் 100. மேற்பட்ட வாரிசுகளுக்கு கலைஞர் கல்வி உதவி தொகையை கிழக்கு மாவட்ட கழக செயலாளர் மாநிலங்களவை உறுப்பினர் மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான கே.ஆர்.என். ராஜேஷ்குமார் எம்பி வழங்கி சிறப்பித்தார். தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் இடத்தில் கழகத்தின் கொள்கை கோட்பாடுகள் குறித்து விளக்கம் அளித்து பேசினார். பின்னர் அனைவருக்கும் உணவுகள் வழங்கி சிறப்பித்தார். இந்த நிகழ்ச்சியில் ராசிபுரம் ஒன்றிய கழக செயலாளர் கே. பி. ஜெகநாதன், மாணவரணி சத்தியசீலன், மாவட்ட பொருளாளர் பாலச்சந்தர், பேரூர் செயலாளர்கள் நல்லதம்பி, சுப்பிரமணியன், ஒன்றிய துணைத் தலைவர் சிவக்குமார், மற்றும் வெண்ணந்தூர் ஒன்றிய கழக செயலாளர் அட்மா குழு தலைவர் ஆர்.எம். துரைசாமி, பேரூர் கழக செயலாளர் தலைவர் ராஜேஷ் குமார், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..

Similar News