வாலாஜா மினி ஹாலில் அதிமுக மத்திய ஒன்றிய சார்பில் நிர்வாகிகளுக்கு பொங்கல் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது...
இந்நிகழ்வில் ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.எம்.சுகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து தெரிவித்து அனைவருக்கும் பொங்கல் பரிசுகள் வழங்கி உரையாற்றினார்.;
வாலாஜா மினி ஹாலில் அதிமுக மத்திய ஒன்றிய சார்பில் நிர்வாகிகளுக்கு பொங்கல் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது... ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை உப்புக் காரா தெருவில் உள்ள மினி ஹாலில் வாலாஜா மத்திய ஒன்றிய அதிமுக சார்பில் தை பொங்கல் தினத்தை முன்னிட்டு ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் கிளைக் கழக நிர்வாகிகளுக்கு பொங்கல் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய ஒன்றிய கழக செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை வாங்கினார். ஒன்றிய கழக அவைத்தலைவர் படியம்பாக்கம் மூர்த்தி முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.எம்.சுகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து தெரிவித்து அனைவருக்கும் பொங்கல் பரிசுகள் வழங்கி உரையாற்றினார். இந்நிகழ்வில் எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் சுமைதாங்கி சி. ஏழுமலை,மாவட்ட துணைச் செயலாளர் டபிள்யூ.எஸ்.வேதகிரி, மாவட்ட,ஒன்றிய, நகர, பேரூராட்சி கழக நிர்வாகிகள், கிளைக் கழக செயலாளர்கள் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் BLA-2 மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.