விளாப்பாக்கம் பேரூராட்சியில் - சமத்துவப் பொங்கல்...
இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, விளாப்பாக்கம் பேரூராட்சியில் தமிழர் திருநாளான பொங்கல் விழாவினை முன்னிட்டு, பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாடும் நிகழ்ச்சி ஊராட்சி மன்றத் தலைவர் மனோகரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.;
விளாப்பாக்கம் பேரூராட்சியில் - சமத்துவப் பொங்கல்... இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, விளாப்பாக்கம் பேரூராட்சியில் தமிழர் திருநாளான பொங்கல் விழாவினை முன்னிட்டு, பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாடும் நிகழ்ச்சி ஊராட்சி மன்றத் தலைவர் மனோகரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் துணைத் தலைவர் ரேகா கார்த்திகேயன் மற்றும் செயல் அலுவலர் ஜானகிராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், விளாப்பாக்கம் பேரூராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள், தூய்மைக் காவலர்கள், மேநீர் தேக்கத் தொட்டி இயக்குபவர் உள்ளிட்ட அனைத்து பேரூராட்சி பணியாளர்களுக்கும் பொங்கல் பரிசு மற்றும் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து மரக்கன்று நடும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், இளநிலை உதவியாளர் வெங்கடேசன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.