தமிழர் தேசம் கட்சி அரசியல் அதிகார மீட்பு மாநாடு
29 கிராமங்களில் நேரில் அழைப்பு விடுத்த கே.கே செல்வகுமார்;
கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 29 கிராமங்களில் தமிழர் தேசம் கட்சி பொதுச் செயலாளர் கே.கே செல்வகுமார் பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை சந்தித்து திருச்சியில் வருகின்ற ஜனவரி 25ஆம் தேதி நடைபெறும் அரசியல் அதிகார மீட்பு மாநாடு நிகழ்ச்சிக்கு நேரில் அழைப்பு விடுத்தார். அதன் ஒரு பகுதியாக வயலூர், வேங்காம்பட்டி, ஆனை கவுண்டன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தமிழர் தேசம் கட்சி பொதுச் செயலாளர் செல்வகுமார் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களை சந்தித்த பேரு அவருக்கு அப்பகுதி நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தி உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், கரூர் மாவட்ட செயலாளர் அருள்ராஜ் உள்ளிட்ட மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்