திருச்செங்கோடு குமரமங்கலம் பகுதியில் புதுமையான முறையில் வாழை மரத்தில் வழுக்கு மரம் ஏறும் போட்டி
திருச்செங்கோடு குமரமங்கலம் பகுதியில் புதுமையான முறையில் வாழை மரத்தில் வழுக்கு மரம் ஏறும் போட்டி சிறுவர்கள் மட்டும் பங்கு பெற்ற இந்த நிகழ்சி புதுமையானதாக இருந்ததால் பெரும் வரவேற்பை பெற்றது;
திருச்செங்கோடு அருகே உள்ள குமாரமங்கலம் பகுதியில் புதுமையான சிறுவர்களை ஊக்குவிக்கும் வகையில் வாழை மரத்தில் வழுக்கு மரம் ஏறும் போட்டி நடைபெற்றது.இதில் 10 குழுக்களாக இருபது சிறுவர்கள் பங்கேற்று வாழை மரத்தில் வழுக்கு மரம் ஏறி வாழை மரத்தின் நுனியில் துணியில் கட்டப்பட்டிருந்த பரிசுப் பொருளை இரு சிறுவர்கள் தட்டிச் சென்றனர். பெரும்பாலும் வழுக்கு மரம் என்பது சுமார் 20 அடி முதல் 25 அடி உயரமுள்ள மரத்தை வழு வழு .எ ன இளைத்து வெந்தயம், விளக்கெண்னை, உளுந்து மாவுஉள்ளிட்ட பொருட்களைக் கொண்டு ஊற வைத்து இளைஞர்கள் வழுக்குமரம் ஏறும் போட்டியில் கலந்து கொள்ள செய்வார்கள். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான வழுக்கு மரம் ஏறும் போட்டியில் உயரமான மரம் ஏற தெரிந்தவர்கள் குழு மனப்பான்மை யோடு இணைந்து செயல்படுகிற இளைஞர்கள் கலந்து கொண்டு வழுக்கு மரம் ஏறிஉச்சியில் கட்டப்பட்டுள்ள பரிசு பொருளை எடுத்து மகிழ்வார்கள். இவ்வாறு போட்டி நடக்கும் இடங்களில் இதை வேடிக்கை பார்க்க வரும் சிறுவர்கள் போட்டி முடிந்தவுடன் வழுக்குமரத்தை தடவுவதும் மேலே ஏற முயற்சி செய்தவதும் நடந்து கொண்டிருக்கும் இவ்வாறு ஏக்கத்துடன் சிறுவர்கள் பார்த்ததை கண்ட குமாரமங்கலம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் சிறுவர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கும் வகையில் வாழை மரத்தில் வழுக்கு மரம் என்ற போட்டியை உருவாக்கினார்கள்.முதலாவதாக நடைபெறும் இந்த போட்டி அந்தப் பகுதி மக்களிடம் பெரும் வரவேற்பையும் பெற்றது ஆச்சரியத்தையும் உருவாக்கியது இதனால் போட்டியை காண ஊர் பொதுமக்கள் பலரும் திரண்டனர் இந்த நிலையில் 10 குழுக்களாக 20 சிறுவர்கள் தங்களைப் பிரித்துக் கொண்டு வாழை மரத்தில் வழுக்குமரம் ஏறும் முயற்சியில் ஈடுபட்டனர்.சுற்றி நின்ற மற்ற சிறுவர்கள் வழுக்கு வரம் ஏறவிடாமல் தடுக்கும் வகையில் தண்ணீரை பீச்சி அடித்தனர்.ஆனால் பலரும் பாதி மரம் கூட செல்ல முடியாமல் வழுக்கி விழுந்த நிலையில் குமரமங்கலம் பகுதியைச் சேர்ந்த மௌலிஸ்வரன் மற்றும் கிஷோர் ஆகியோர் ஒற்றுமையுடன் மெளலீஸ்வரன் கிஷோர் தோளில் ஏறி போட்டி இலக்கைத் தொட்டு வாழை மரத்தின் நுனியில் கட்டப்பட்டிருந்த மஞ்சள் துண்டில் இருந்த பரிசு பொருளை மவுலீஸ்வரன் எடுத்தார்.சேவல்கள் இந்த புதுமையான முயற்சியை பாராட்டி ஊர் பொதுமக்கள் சிறுவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.இந்த போட்டி குறித்து வெற்றி பெற்ற கிஷோர் மற்றும் மௌலீஸ்வரன் ஆகியோர் கூறியதாவது வழக்கமாக எங்கள் ஊரில் வழுக்கு மரம் ஏறும் போட்டி நடைபெறும் நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்போம் எங்களுக்கும் ஏற வேண்டும் என ஆசை இருக்கும் ஆனாலும் முடியாது எங்களது ஏக்கத்தை தீர்க்கும் வகையில் எங்கள் ஊர் பொதுமக்கள்இந்த முறை வாழை மரத்தில் வழுக்கு மரம் என்றஉண்மையான போட்டியை உருவாக்கி நாங்களும் வழக்கு மரம் ஏறும் வாய்ப்பை உருவாக்கி தந்துள்ளனர் இதில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம் என மகிழ்ச்சியுடன் கூறினார்கள் தொடர்ந்து விழாவை நடத்தி வரும் குழுவை சேர்ந்த ரஞ்சித் என்பவர் கூறும் போது வழுக்கு மரம் என்பது தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றாகும்36 வருடங்களாக குமரமங்கலம் பகுதியில் வலிக்குமரன் கோலப்போட்டி விளையாட்டு போட்டிகள் என பொங்கலை கொண்டாடும் வகையில் சிறப்பாக நடத்தி வருகிறோம் ஒவ்வொரு ஆண்டு வழுக்குமரம் முடிந்ததற்கு பிறகும் சிறுவர்கள்என்ன மரத்தில் ஏற முயற்சி செய்தும் தடவி பார்த்தபடியும் ஏக்கத்துடன் செல்வார்கள் ஆகவே அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்கிற விதத்தில் என்ன செய்யலாம் என யோசித்தபோது வாழை மரத்தில் வலிக்குமரம் என்ற புதுமையான முயற்சிகளை பற்றி சுமார் 10 அடி உயரமுள்ள வாழை மரத்தை வழக்கு மரம் தயாரிப்பது போல் தயாரித்து அதில் 8 வயது வரையில் உள்ள சிறுவர்கள் ஏரி பரிசு பொருளை பெறும் வகையில் ஏற்பாடு செய்திருந்தோம் அதன்படி 10 குழுக்களை சேர்ந்தவர்கள் இன்றுவாழை மரத்தில் வழக்கு மரம் ஏறினார்கள்.அதில் மௌலீஸ்வரன் கிஷோர் என்ற இரண்டு சிறுவர்கள் திறமையாக ஒருவர் தோளில் மற்றொருவர் ஏரி முயற்சி செய்து பாலிமர்த்தின் நுனியில் கட்டப்பட்டிருந்த மஞ்சள் துளியில் வைக்கப்பட்டிருந்த பரிசுப் பொருளை எடுத்தனர் சிறுவர்களின் முயற்சியை பாராட்டி ஊர் பொதுமக்கள் பரிசு வழங்கியுள்ளோம் அது மட்டுமில்லாமல்வரும் காலங்களில் இது போல் வேறு சில புதுமையான விளையாட்டுகளையும் நடத்த உள்ளோம் என கூறினார்.நிகழ்ச்சியை ஊர் பொதுமக்கள் ஆண்கள் என பலரும் கண்டு மகிழ்தனர்.