மாமன்னர் அல்லாள இளைய நாயக்கர் பிறந்தநாள் விழா.

மாமன்னர் அல்லாள இளைய நாயக்கர் பிறந்தநாள் விழா. அமைச்சர் மதிவேந்தன் பங்கேற்று திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.;

Update: 2026-01-16 16:35 GMT
பரமத்தி வேலூர், ஜன.16: கி.பி.15 ஆம் நூற்றாண்டு காலத்திலிருந்து விஜயநகரப் பேரரசின் கீழ் சிற்றரசராக சங்க காலம் தொட்டே நீண்ட நெடிய வரலாற்று பண்பாடும், நீர் வளமும், நில வளமும் சூழ்ந்த கொங்கு பகுதியின் 24 நாடுகளின் முதன்மை நாடான காவிரியும், திருமணிமுத்தாறும் பாய்ந்தோடும் கீழ்க்கரை அரையநாட்டை நாமக்கல் மாவட்டம் பரமத்தியை தலைநகரமாக கொண்டு கோட்டை கட்டி சீறும் சிறப்புமாக ஆட்சி புரிந்து வந்தவர் மாமன்னர் அல்லாள இளைய நாயக்கர். அவரது ஆட்சி காலத்தில் விவசாயம் பாதுகாக்க ஜேடர்பாளையத்தில் காவேரியின் குறுக்கே தடுப்பணை அமைத்து சுமார் 15 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலம் பயன் பெற ராஜ வாய்க்கால் ஏற்படுத்தியவர் அல்லாள இளைய நாயக்கர். இன்றளவும் அப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரமாகவே திகழ்கின்ற அக்கால்வாயை அமைத்தவர் மாமன்னர் அல்லாள இளைய நாயக்கர். மேலும் பல்வேறு கோவில் திருப்பணிகளும் செய்துள்ளார். அன்னாரை பெருமைப்படுத்தும் வகையில், அப்பகுதி விவசாய பெருமக்களின் கோரிக்கையினை ஏற்று அல்லாள இளைய நாயக்கருக்கு ஜேடர்பாளையத்தில் திருவுருவச் சிலை அமைக்கப்பட்டு, கடந்த 28.1.2023 அன்று நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் இளைஞர் நலன் மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது. வருடம் தோறும் தை மாதம் 1 ஆம் நாள் அவரது பிறந்த தினம் அரசு விழாவாக கொண்டாடபட்டு வருகின்றனர். 15 ஆம் தேதி ஜேடர்பாளையத்தில் நடைபெற்ற விழாற்கு மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தலைமை வகித்தர். சிறப்பு விருந்தினராக அமைச்சர் மதிவேந்தன் கலந்துகொண்டு அல்லாள இளைய நாயக்கர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எஸ்.மூர்த்தி, திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அல்லாள இளைய நாயக்கரின் வாரிசுதாரர் கிருஷ்ணன் பட்டையக்காரருக்கு பொன்னாடை அணிவித்து, கௌரவித்தார்கள். இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆகாஷ் ஜோஷி. துணை காவல் கண்காணிப்பாளர்கள் சங்கீதா, கிருஷ்ணன், காவல் ஆய்வாளர் இந்திராணி, திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் பி.எஸ். லெனின், உதவி பொறியாளர் (நீர்வளத்துறை) விஜயகுமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தே.ராம்குமார், பரமத்தி வட்டாட்சியர், பரமத்திவேலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News