மாமன்னர் அல்லாள இளைய நாயக்கர் பிறந்தநாள் விழா.
மாமன்னர் அல்லாள இளைய நாயக்கர் பிறந்தநாள் விழா. பல்வேறு கட்சியினர் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.;
பரமத்தி வேலூர், ஜன. 16: தை மாதம் 1 ஆம் தேதி அவரது பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாடபட்டு வருகின்றனர். 15 ஆம் தேதி ஜேடர்பாளையத்தில் நடைபெற்ற விழாவில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இவ்விழாவில் கலந்து கொண்ட பாரதிய ஜனதா கட்சியின் நாமக்கல் மேற்கு மாவட்ட தலைவர் ராஜேஷ் மாவட்ட பொருளாளர் குமார், மாவட்ட பொதுசெயலாளர்கள் சுபாஷ், மகேஸ்வரன், மாவட்ட பொருளாளர் பத்மராஜன், ஒன்றிய தலைவர்கள் பூபதி, வரதராஜ், சசிதேவி உள்ளிட்டோர் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதேபோல் தமிழக நீதி கட்சியின் நிறுவனர் வாழவந்தியார் சரவணன் தலைமையில் மாநிலத் தலைவர், மாவட்ட பொறுப்பாளர் கணேசன், பரமத்தி வேலூர் தொகுதி பொறுப்பாளர் கனகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.