திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த 17 முதல் 25 வயதிற்குட்பட்ட இளைஞர்கள், இளம்பெண்கள் சீருடை பணிகளில் சேர ஆர்வமும் தேவையான உடல், கல்வி தகுதி உடையவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இந்த வகுப்பானது நாளை முதல் தொடங்க உள்ளதாகவும், இதனை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளவும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சுகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.