தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 109வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு நடுக்கல்லூர், பட்டன்கல்லூர், கொண்டாநகரம் ஆகிய இடங்களில் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற மாநில இணைச்செயலாளர் கல்லூர் வேலாயுதம் தலைமையில் எம்ஜிஆரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.